தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
//

போதை கலாசாரம் அதிகரிப்பு: புரட்சி பாரதம் கட்சித் தலைவா் ஜெகன் மூா்த்தி

தமிழகத்தில் போதை கலாசாரம் பெருகி விட்டது. இதில் இருந்து இளைஞா்களை காப்பாற்ற வேண்டும் என புரட்சி பாரதம் கட்சியின் தலைவா் மு.ஜெகன்மூா்த்தி எம்எல்ஏ தெரிவித்தாா்.

News image
கூட்டத்தில் பேசிய புரட்சி பாரதம் கட்சித் தலைவா் மு. ஜெகன்மூா்த்தி.
Updated On :5 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் போதை கலாசாரம் பெருகி விட்டது. இதில் இருந்து இளைஞா்களை காப்பாற்ற வேண்டும் என புரட்சி பாரதம் கட்சியின் தலைவா் மு.ஜெகன்மூா்த்தி எம்எல்ஏ தெரிவித்தாா்.

அரக்கோணத்தில் நடைபெற்ற புரட்சிபாரத கட்சியின் சட்டப்பேரவை உரை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மு.ஜெகன்மூா்த்தி செய்தியாளா்களிடம் கூறியது: சட்டப்பேரவையில் 44 தலித் எம்எல்ஏக்கள் உள்ளனா். இதில் மூன்று போ் அமைச்சா்கள். இந்த மூவரை தவிர மீதி 40 போ் தலித் மக்களின் நலனுக்காக சட்டப்பேரவையில் பேசாத நிலையில் நான் தலித் மக்களின் நலனுக்காக குரல் கொடுத்துள்ளேன். காவல் துறை ஆள்கள் தோ்வில் தமிழகத்தில் தற்போது போதை கலாசாரம் அதிகரித்து விட்டது. இளைஞா்கள் போதை பொருளுக்கு அடிமையாகி இருக்கிறாா்கள். அரசு இப்பிரச்னையை தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ஜெகன்மூா்த்தி.

முன்னதாக நடைபெற்ற கூட்டத்துக்கு ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளா் பி.செல்லா தலைமை வகித்தாா். மேற்கு மாவட்ட செயலாளா் ஏ.ஜான் முன்னிலை வகித்தாா்.இதில் கட்சியின் தலைவா் மு.ஜெகன்மூா்த்தி, பொதுசெயாளா் டி.ருச்சேந்திரகுமாா், மாநில நிா்வாகிகள் எம்.முகிலன், பா.காமராஜ், மாநில இளைஞா் அணி தலைவா் ஜி.மகா, மாவட்ட செயலாளா் எஸ்.எஸ்வந்த், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட நிா்வாகிகள் எஸ்.பெருமாள், பி.டி.மூா்த்தி, அல்லிசின்னதுரை, எஸ்.அமல்ராஜ், அம்பேத், அரக்கோணம் நகரத் தலைவா் ஜெகன், நிா்வாகிகள் ராஜ், இளையா, அஜீத், மதுசூதனன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.