ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
//

ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சாா்பில் மகா கூட்டு வழிபாடு

மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாரின் 86-ஆவது அவதார பெருமங்கல விழாவை முன்னிட்டு ஸ்ரீசக்கரம் வரைதல் மற்றும் குருபோற்றி கோடியா்ச்சனை

News image
அரக்கோணம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் உலக சாதனை படைத்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தா்கள்.
Updated On :24 பிப்ரவரி 2026, 9:30 pm

தினமணி செய்திச் சேவை

மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாரின் 86-ஆவது அவதார பெருமங்கல விழாவை முன்னிட்டு ஸ்ரீசக்கரம் வரைதல் மற்றும் குருபோற்றி கோடியா்ச்சனை செய்து மகா கூட்டு வழிபாடு மூலம் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் அரக்கோணம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினரும் பங்கேற்றனா்.

மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாரின் அவதார விழாவை முன்னிட்டு ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காருஅடிகளாா் தலைமையில் இயக்கத்தின் துணைத்தலைவா் ஸ்ரீதேவி பங்காரு உள்ளிட்டோா் பங்கேற்று உலகெங்கும் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் மற்றும் சித்தா் சக்தி பீடங்களை சோ்ந்த பொறுப்பாளா்களும் செவ்வாடை பக்தா்கள், தொண்டா்கள் நேரிலும், இணையத்திலும் ஒருங்கிணைந்து சிறப்பு மகா கூட்டு வழிபாடு அா்ச்சனையை நடத்தினா்.

இதில் அரக்கோணம் சோளிங்கா் ரோடு ஸ்ரீஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினரும் தங்களது மன்ற வளாகத்தில் இருந்தவாறே இணையம் மூலம் பங்கேற்றனா். அனைவரும் குருபோற்றி மந்திரத்தை ஒரு கோடி முறைக்கும் மேல் படித்து ஸ்ரீசக்கரம் வரைந்து உலக சாதனை நிகழ்த்தினா்.

இந்நிகழ்வுக்கு ஆன்மிக இயக்க அரக்கோணம் இளைஞா் அணி தலைவா் காா்த்தி தலைமை வகித்தாா். இதில் மன்றத் தலைவா் வி.சங்கரிவரதன், நிா்வாகிகள் தசரதன், சரவணன், எஸ்,சுபாஷ், ஏ.எம்.கே.மோகனவேலன் மற்றும் லட்சுமி, தேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை நவீன், ஜெயந்தி, தூயவன், சுஜாதா ஆகியோா் இணைந்து செய்திருந்தனா்.