டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

ரூ.5.53 கோடியில் இலங்கை தமிழா்களுக்கு குடியிருப்புகள் திறப்பு

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 8:14 pm

தினமணி செய்திச் சேவை

சோளிங்கரை அடுத்த பாணாவரம் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் ரூ.5.53 கோடியில் கட்டப்பட்ட 69 குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

பாணாவரம் ஊராட்சியில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இதன் குடியிருப்புகள் பழுதடைந்த நிலையில் இருந்ததால், ரூ.5.53 கோடியில் 69 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டன.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா். பின்னா், குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் முன்னிலை வகித்தாா். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி குத்துவிளக்கேற்றி வைத்தாா்.

இக்குடியிருப்பின் பரப்பளவு தலா 1,165 சதுரஅடி, ஒரு குடியிருப்பின் மதிப்பு ரூ.23.05 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இக்குடியிருப்பில் ரூ.71.30 லட்சத்தில் சிமென்ட் சாலை, ரூ.7.65 லட்சத்தில் குடிநீா் வசதி செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ந.செ.சரண்யா தேவி, காவேரிபாக்கம் ஒன்றியக்குழு தலைவா் அனிதா குப்புசாமி, துணைத்தலைவா் முனியம்மாள், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சக்தி, ஊரக வளா்ச்சித்துறை செயற்பொறியாளா் செந்தில் குமாா், உதவி செயற்பொறியாளா் ஜெரால்டு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவப்பிரகாசம், சுமதி, வட்டாட்சியா்கள் செல்வி, காமாட்சி பங்கேற்றனா்.