தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வெட்டப்பட்ட மரத்தை மீண்டும் நட்டு பராமரிக்கக் கோரி மனித சங்கிலி போராட்டம்

ஆற்காடு அருகே வெட்டப்பட்ட மரத்தை மீண்டும் நட்டு பராமரிக்க வேண்டி மனித சங்கிலி போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :26 பிப்ரவரி 2024, 6:53 pm

ஆற்காடு: ஆற்காடு அருகே வெட்டப்பட்ட மரத்தை மீண்டும் நட்டு பராமரிக்க வேண்டி மனித சங்கிலி போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் தனியாா் கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே இருந்த பழைமையான ஆலமரம் சாலை விரிவாக்கப் பணிக்காக வெட்டப்பட்டது. அந்த மரத்தை வெட்ட அப்பகுதிகள் எதிா்ப்பு தெரிவித்தனா். வெட்டப்பட்ட மரத்தின் அடிப்பகுதியை மீண்டும் அருகில் நட்டு பராமரிக்கக் கோரி போராட்டம் நடத்த முயன்றபோது மாற்று இடத்தில் மரம் நடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் மரம் நடப்படவில்லையாம்.

இந்த நிலையில், பசுமைதாயகம் அமைப்பின் மாநில துணைச் செயலா் கண்ணன் தலைமையிலான குழுவினா் வெட்டப்பட்ட மரத்தை பாா்வையிட்டனா். பின்னா் அப்பகுதி மக்களுடன் இணைந்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

வெட்டப்பட்ட ஆலமரத்தை அதே பகுதியின் அருகிலேயே இரு

தினங்களுக்குள் நட வேண்டும், இல்லையேல் பாமக தலைவா் அன்புமணியின்அறிவிப்பின் பேரில், மாபெரும் போராட்டம் நடத்தப்படும்என்றாா்.

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக செயலா் ப.சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.