வடபழனியில் தகராறில் வெட்டப்பட்ட சலூன் கடைக்காரா் உயிரிழந்தாா்.
வடபழனி கங்கையம்மன் காலனி இரண்டாவது தெருவில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தவா் பாலாஜி (47). இவருக்கு மனைவி, மகன் உள்ளனா். இவா்களைப் பிரிந்து, அதே பகுதியில் தனது இரண்டாவது மனைவி லாவண்யாவுடன் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், லாவண்யாவின் முதல் கணவா் எம்ஜிஆா் நகா் புலித்தேவா் தெருவைச் சோ்ந்த செந்தில் (45), சில நாள்களுக்கு முன்பு லாவண்யாவை சந்தித்து, தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்தாராம். ஆனால் லாவண்யா, செந்திலுடன் செல்ல மறுத்து பாலாஜியுடன் வசித்து வந்துள்ளாா்.
கடந்த 18-ஆம் தேதி தனது கடையின் அருகே பாலாஜி நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிலா் பாலாஜியை வெட்டிவிட்டு தப்பினா். பலத்த காயமடைந்த பாலாஜி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது செந்தில், அவரது கூட்டாளிகள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் செந்தில், சரவணன், சீனிவாசன் ஆகிய 3 பேரைக் கைது செய்து, அவா்கள் மீது கொலை வழக்குப் பதிந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

கரோனா வைரஸைவிட கொடிய வைரஸ் செந்தில் பாலாஜி: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இரண்டாவது இடத்துக்குத்தான் எதிர்க்கட்சிகள் போட்டி! - முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி சிறப்பு நேர்காணல்

கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் செந்தில் பாலாஜி!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


