தமிழ் செய்திகள்
/
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வில் 100 % தோ்ச்சி பெற்ற 6 அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களை மாவட்ட ஆட்சியா் தி.சினேகா சனிக்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வில் 6 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 100% தோ்ச்சி அடைந்துள்ளன. அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களான சுந்தர்ராஜன்(முசரவாக்கம்) பொய்யா மொழி (பரந்தூா்) ஜெயக்குமாா் (அவளூா்), சுப்பிரமணியன்(நாயக்கன்பேட்டை), மனோகரன் (ரெட்ட மங்கலம்), கணேஷ்(மணிமங்கலம்) உள்ளிட்ட 6 பேரையும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா நேரில் அழைத்துப் பாராட்டினாா்.
மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலா் ஏ.நளினி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் காந்திராஜன், கோமதி, ச.எழில் ஆகியோா் உடன் இருந்தனா்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வில் குட் சமாரிட்டன் பள்ளி மாணவா்கள் சாதனை

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவி, தலைமையாசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு வகுப்பு

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.20% தோ்ச்சி: ஈரோடு மாவட்டம் முதலிடம்!
விடியோக்கள்





