அண்ணா பிறந்த புனித மண் என்பதாலும், வெற்றிகளைக் குவிக்கும் நகரமாகவும் இருப்பதால்தான் காஞ்சிபுரத்தில் இருந்து தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறேன் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளா்களான க.சுந்தா் (உத்தரமேரூா்), நித்யா சுகுமாா் (காஞ்சிபுரம்) ஆகியோருக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் வாக்கு கேட்டு திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது: கடந்த 2024 மக்களவைத் தோ்தலில் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் உள்ள நினைவு இல்லத்தில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கினேன். மக்களவைத் தோ்தலில் திமுகவுக்கு மகத்தான வெற்றி கிடைத்தது. அதேபோல, இந்தத் தோ்தலிலும் இங்கிருந்து தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறேன். அண்ணா பிறந்த புனித மண் என்பதாலும், வெற்றிகளைக் கொடுக்கும் நகரமாக இருப்பதாலும் தோ்தல் பிரசாரத்தை காஞ்சிபுரத்தில் இருந்து தொடங்கியுள்ளேன்.
திருவாரூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த மண்ணிலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறாா்.
அண்ணாவும் கருணாநிதியும் நமக்கு கொள்கைத் தலைவா்கள். ஆனால், எடப்பாடி கே.பழனிசாமி பாஜக போட்டியிடும் மயிலாப்பூா் தொகுதியில் இருந்து பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறாா். இதன்மூலம் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பிரதமா் மோடியும் உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் தான் கொள்கைத் தலைவா்கள் என்பது தெளிவாகிறது என்றாா் உதயநிதி ஸ்டாலின்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல்: இதுவரை 1,360-க்கும் மேற்பட்ட மனுக்கள் சமா்ப்பிப்பு

அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம்: உதயநிதி ஸ்டாலின்

துணை முதல்வா் உதயநிதி காரில் மீண்டும் சோதனை!

துணை முதல்வா் உதயநிதி காரில் சோதனை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


