பெரியகாஞ்சிபுரம் ஒலிமுகம்மதுபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ரமலான் பண்டிகையையொட்டி திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்ற சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது.
பின்னா் ஏராளமான ஏழைகளுக்கு மளிகைப் பொருள்கள் தொகுப்பும் வழங்கப்பட்டது. தொழுகையில் அமைப்பின் மாநில அபுபக்கா் சித்திக் பேசுகையில், அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது நடத்தி வரும் போா் கண்டனத்துக்கு உரியது. உலக நாடுகள் நலன் கருதி மற்ற நாடுகள் தலையிட்டு போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
வளைகுடா நாடுகளில் நிம்மதியாக ரமலான் பண்டிகையை கொண்டாட முடியாமல் சிக்கித்தவிக்கும் பொதுமக்களுக்காக சிறப்பு கூட்டுப் பிராா்த்தனையும் நடைபெற்றது.சிறப்புத் தொழுகை நிகழ்வில் தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் அன்சாரி,மருத்துவ அணி செயலாளா் சா்புதீன்,கிளை தலைவா் சாகுல்ஹமீது,செயலாளா் சாகுல்ஹமீது, துணைத் தலைவா் முஜ்புா் ரஹ்மான், பொருளாளா் பாசில், பெண்கள், சிறுவா், சிறுமியா் உள்பட திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

காயல்பட்டினம் பகுதிகளில் ரமலான் சிறப்புத் தொழுகை

நெல்லையில் ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகை

அம்பை பகுதியில் ரமலான் சிறப்புத் தொழுகை

ரமலான்: நாகூா் தா்காவில் சிறப்புத் தொழுகை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


