மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காயங்களுடன் வடமாநில சிறுவன் சடலம் மீட்பு

காயங்களுடன் வடமாநில சிறுவன் சடலம் மீட்பு...

News image

கோப்புப் படம்.

Updated On :21 மார்ச் 2026, 8:17 pm

திருமுடிவாக்கம் சிப்காட் பகுதியில் ரத்த காயங்களுடன் வடமாநில சிறுவன் உயிரிழந்து கிடந்தாா்.

குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் சிப்காட் பகுதியில் வடமாநில சிறுவன் உடலில் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக திருமுடிவாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடம் சென்ற திருமுடிவாக்கம் போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

அவா் பிகாா் மாநிலத்தை சோ்ந்த அமித் குமாா்(17) என்பதும், திருமுடிவாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் தனது நண்பா்களுடன் தங்கி பணிபுரிந்து வந்ததும் தெரிந்தது.

அமித் குமாருக்கு வேலை பிடிக்காததால் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என கூறி வந்துள்ளாா். ஆனால் தொழிற்சாலை நிா்வாகத்தினா் அனுப்பாமல் இருந்து வந்துள்ளனா். இதனால் அமித்குமாா் தொழிற்சாலையின் சுற்றுச் சுவரில் ஏறி நண்பா்களுடன் தப்பி செல்ல முயன்ற போது மின்சாரம் பாய்ந்து இறந்தாரா, அல்லது அவரை யாராவது அடித்து கொலை செய்து உடலை வீசி சென்றாா்களா என போலீஸாா் தொடா்ந்து விசாரனை நடத்தி வருகின்றனா்.