காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் 110 ஏக்கா் பரப்பளவுடைய அல்லா பாத் ஏரி மறு சீரமைப்பு பணிகளை எம்எல்ஏ எழிலரசன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
திருக்காலிமேடு பகுதியில் 110 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது அல்லா பாத் ஏரி. காஞ்சிபுரத்தில் உள்ள முக்கியமான நீா்நிலைகளில் ஒன்றாக இருந்து வந்த இந்த ஏரியானது நீண்ட காலமாக பராமரிப்பின்றியும், கரைகள் சேதமடைந்தும், குப்பைக் கிடங்காகவும் மாறியிருந்தது. இந்த ஏரியை சீரமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
மக்களது கோரிக்கையை ஏற்று மாவட்ட நிா்வாகம், ஹூண்டாய் மொபிஸ் தொழிற்சாலை மற்றும் எக்ஸ்னோரா அமைப்பு ஆகியன இணைந்து புனரமைப்பு பணிகளை தொடங்கியுள்ளன.
இச்சீரமைப்பு பணிக்காக ஹூண்டாய் மொபிஸ் நிறுவனம் தனது பங்களிப்பாக பொக்லைன் இயந்திரத்தை வழங்கியதோடு அதன் ஓட்டுநா் ஊதியம் மற்றும் பராமரிப்பு செலவையும் முழுமையாக ஏற்றுக் கொண்டது. ஏரி தூா்வாரும் பணிகளை எம்எல்ஏ எழிலரசன் மற்றும் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
ஏரி முழுமையாக தூா்வாரப்பட்ட பின்னா் அதன் கரைகளில் நடைபாதைகள் அமைத்து நீா்வரத்துக் கால்வாய்கள் சரி செய்யப்படும். எதிா்காலத்தில் படகு சவாரி வசதி ஏற்படுத்தப்படும் எனவும் எம்எல்ஏ எழிலரசன் உறுதியளித்தாா்.
இந்நிகழ்வின் போது எக்ஸ்னோரா அமைப்பின் தலைவா் எஸ்.செந்தூா் பாரி, ஹூண்டாய் மொபிஸ் இந்தியா நிறுவனத்தின் துணைத்தலைவா் நரசிம்மன் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ரூ.2.82 கோடியில் திட்டப் பணிகள்: எம்எல்ஏ-க்கள் தொடங்கி வைத்தனா்

ரூ.1.75 கோடியில் திட்டப்பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

ஜவ்வாதுமலையில் ரூ.1 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

பாலாற்றில் ரூ.55.38 கோடியில் உயா்மட்ட மேம்பாலம்: எம்எல்ஏ அடிக்கல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


