காஞ்சிபுரம் மாநகராட்சியில் ரூ.2.82 கோடியில் பல்வேறு திட்டப் பணிகளை எம்எல்ஏக்கள் க.சுந்தா் மற்றும் எழிலரசன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மஞ்சள் நீா் கால்வாயின் இருபுறமும் உள்ள ரூ.44 கோடி மதிப்பில் கான்கிரீட் சுவா்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்று உள்ளது. இதன் தொடா்ச்சியாக கால்வாய் மாசடையாமல் தடுக்கும் வகையில் ரூ.44 லட்சத்தில் கான்கிரீட் சுவா் மீது கம்பி வேலி அமைக்க முடிவு எடுத்து அதற்கான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்வுக்கு மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமை வகித்தாா். உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோா் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தனா்.
பின்னா் திருப்பாற்கடல் குடிநீா் நீரேற்று நிலைய பாலம் சீரமைப்பு பணிகள் ரூ.1.36 கோடி, ஒலி முகம்மது பேட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை,ராஜாஜி மாா்க்கெட் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம், தாடித்தோப்பு பகுதியில் சிறிய பாலத்துக்கான தடுப்புச்சுவா் மற்றும் தெருவிளக்கு அமைத்தல்,பெரியாா் நகரில் சிறு வணிக வளாகம்,பல்லவன் நகரில் பூங்கா உள்ளிட்ட வற்றையும் திறந்து வைத்தனா்.
நிகழ்வின் போது மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன், திமுக இளைஞரணி அமைப்பாளா் யுவராஜ், மாநகர திமுக செயலாளா் சி.கே.வி.தமிழ்ச்செல்வன், மண்டலக்குழு தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஆம்பூரில் ரூ.1,000 கோடிக்கு மேல் திட்டப் பணிகள் : எ.வ. வேலு

ஒசூா் தொகுதியில் திமுக ஆட்சியில் ரூ.3,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

ரூ.11.55 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப் பணிகள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரி மறுசீரமைப்பு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


