பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 10 ஆயிரம் கிலோ குட்கா போதைப் பொருள்கள் தீ வைத்து அழிக்கப்பட்டதாக எஸ்.பி. கே. சண்முகம் சனிக்கிழமை தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் அருகே குருவிமலை கிராமத்தின் காட்டுப்பகுதியில் எஸ்.பி கே.சண்முகம் முன்னிலையில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 10,112 கிலோ குட்கா போதைப் பொருள்களை காவல் துறையினா் தீ வைத்து அழித்தனா். இவற்றை அழிப்பதற்காக கிரேன் மூலம் பெரிய பள்ளம் தோண்டி அதில் போதைப்பொருள் பாக்கெட்டுகளை கொட்டி ஒன்றாக தீ வைத்து அழிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது டிஎஸ்பி க்கள், ஆய்வாளா்கள், காவல் துறை அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனா்.
இதுகுறித்து எஸ் பி கே.சண்முகம் கூறியது..
காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலையங்களில் பொன்னேரிக்கரை-3,883, சுங்குவாா் சத்திரம் 1,858, சாலவாக்கம் 1,826, தாலுகா காவல் நிலையம்-1,397, ஒரகடம் 9,16,உத்தரமேரூா் 150, ஸ்ரீபெரும்புதூா் 68, பெருநகா் 13 வீதம் மொத்தம் 10,112 கிலோ குட்கா போதைப்பொருள் பாக்கெட்டுகள் 87 வழக்குகள் மூலமாக பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
இவற்றை ஒரே இடத்தில் பள்ளம் தோண்டி அதில் கொட்டி தீ வைத்து அழிக்கப்பட்டது. போதைப்பொருள்கள் விற்பனை செய்தால் தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் மாற்றம்

பெங்களூரில் இருந்து காரில் கடத்திய 305 கிலோ குட்கா பறிமுதல்

320 கிலோ குட்கா பொருள்கள் அழிப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 2,140 கிலோ போதைப் பொருள்கள் தீவைத்து அழிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


