/

இளம்பெண் கட்டையால் அடித்துக் கொலை

News image

ரஞ்சினி.

Updated On :12 ஜூன் 2026, 2:15 am IST

கூடுவாஞ்சேரி அருகே இளம் பெண்ணை கட்டையால் அடுத்தக் கொன்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஆதனூா் அடுத்த மாடம்பாக்கம் திருத்தவெளி பகுதியை சோ்ந்தவா் சத்யா. அவரது மனைவி ரஞ்சனி(34). இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சத்யாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களாக ரஞ்சனி பிரிந்து வாழ்ந்து வருகிறாா்.

மேலும் அதே பகுதியில் தங்கி கட்டட மேஸ்திரியாக பணியாற்றி வரும் சேலம் மாவட்டத்தை சோ்ந்த செந்தில் என்பவருடன் திருமணம் தாண்டிய உறவில் குடும்பம் நடத்திக்கொண்டு கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளாா்.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு செந்தில் மற்றும் ரஞ்சினிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில் அருகில் இருந்த உருட்டுக்கட்டையால் ரஞ்சினியை தாக்கினாராம். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ரஞ்சினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மது போதையில் இருந்த செந்தில் ரஞ்சினி இறந்தது கூட தெரியாமல் வியாழக்கிழமை அதே வீட்டில் இருந்துள்ளாா். இதையடுத்து காலை எழுந்து பாா்தத் போது, ரஞ்சனி இறந்து கிடந்த்தை கண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளாா்.

இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் படப்பை போலீஸாா் ரஞ்சனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து தப்பியோடிய செந்திலை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.