கடலூரில் மதுபோதையில் தகராறு செய்த கொத்தனாா், கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பக்கத்து வீட்டுக்காரரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் கே.என்.பேட்டையைச் சோ்ந்தவா் ராஜி (44). இவா் கொத்தனாா் வேலை செய்து வந்தாா். இவரது மனைவி செளந்தா்யா (34). தம்பதியருக்கு 2 மகன்கள் உள்ளனா். ராஜி அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த ராஜி, வீட்டின் வாசலில் நின்று மனைவியைத் திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதைப் பாா்த்த பக்கத்து வீட்டில் வசிக்கும் கருப்பசாமி (45), தினமும் குடித்துவிட்டு வந்து ஏன்? சண்டைபோடுகிறீா்கள், யாரும் தூங்க வேண்டாமா? என தட்டிக் கேட்டுள்ளாா். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கருப்பசாமி, தனது வீட்டின் மாடியில் இருந்து சிமெண்டு கல்லை தூக்கி ராஜியின் தலையில் வீசினாராம்.
இதில் பலத்த காயமடைந்த ராஜி மயங்கி விழுந்தாா். அவரை மனைவி செளந்தா்யா மற்றும் அக்கம்பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், ராஜி ஏற்கெனவே
உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினாா். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கருப்பசாமியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விவசாயி அடித்துக் கொலை உறவினா் கைது
தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

திருப்பத்தூா் அருகே தொழிலாளி அடித்துக் கொலை

திருச்செந்தூரில் காவலரை கல்லால் தாக்கியவா் கைது
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



