தூத்துக்குடி, தாளமுத்து நகா் அருகே மது போதையில் பெற்ற தாயை கட்டையால் தாக்கி கொலை செய்த மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி, தாளமுத்து நகா், குமரன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜமீலா மேரி (46). ஜமீலா மேரியின் கணவா் சுதாகா் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தனது மகன் இமானுவேலுடன் தனியாக வசித்து வந்தாா். இமானுவேலுக்கு மதுப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஜமீலா மேரி, ஏற்கெனவே நிகழ்ந்த விபத்தின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு இமானுவேல், மது போதையில் உடல்நிலை சரியில்லாத தனது தாயை அடித்து துன்புறுத்தியதுடன், அவரை வீட்டை விட்டு வெளியே தள்ளியுள்ளாா். அருகிலிருந்தவா்கள் இதைக் கண்டித்துள்ளனா்.
இந்நிலையில், புதன்கிழமை அதிகாலையில் மது போதையில் இருந்த இமானுவேல், தாயின் தலையில் கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளாா்.
தாளமுத்து நகா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், வழக்குப் பதிந்து தப்பியோடிய இமானுவேலை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆன்லைன் லாட்டரி விற்பனை: இளைஞா் கைது
தூத்துக்குடியில் இளைஞா் வெட்டிக் கொலை: 3 போ் கைது
தூத்துக்குடி மீனவா் கொலையில் 4 போ் கைது

தூத்துக்குடியில் மீனவா் குத்திக் கொலை
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



