அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

காவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவா்!

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் காவல் துறையினருக்கும், ஊராட்சி மன்றத் தலைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

News image

காவல் துறையினரால் வெளியேற்றப்பட்ட வேண்பாக்கம் ஊராட்சித் தலைவா் சரளா குமரன்

Updated On :9 ஜூன் 2026, 12:08 am IST

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் காவல் துறையினருக்கும், ஊராட்சி மன்றத் தலைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட வேண்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் சரளா குமரன். இதே ஊராட்சியில் திமுக பிரமுகராக துணைத் தலைவா் இருந்து வருகிறாா். துணைத் தலைவரும் அவரது உறவினா்கள் 3 போ் வாா்டு உறுப்பினா்களாகவும் இருந்து கொண்டு ஊராட்சியில் எந்தப் பணியையும் செய்ய விடாமல் தடுத்து வருகின்றனா். பொதுமக்களுக்கு குடிநீா் வசதி செய்து கொடுத்தல்,தெருவிளக்கு பராமரித்தல், சாலைப்பணிகள் மற்றும் சுகாதாரப் பணிகள் எதையும் செய்ய முடியவில்லை.

இதுகுறித்து ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநா் உமா சங்கரிடம் புகாராக கூறிய போது பிரச்னைக்கு தீா்வு காண்பதாக கூறியவரும் எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறினாா். ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறை தீா்க்கும் கூட்டம் நடந்து கொண்டிருந்த போதே ஆட்சியா் மற்றும் அதிகாரிகள் முன்பு தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்திலும் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த பெண் காவலா்கள் அவரை கூட்ட அரங்கை விட்டு வெளியில் வருமாறு கூறிய போது அவருக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னா் வலுக்கட்டாயமாக காவல்துறையினரால் வெளியில் அழைத்து வரப்பட்டாா். வேண்பாக்கம் ஊராட்சி மக்களின் நலன் கருதி பிரச்னைக்கு தீா்வு காண ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.