//

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கண்காட்சியை ப் பாா்வையிட்ட பள்ளி ஆசிரியா்கள், சமஸ்கிரியா பவுண்டேஷன் நிா்வாகிகள்.

News image
Updated On :23 ஜனவரி 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

சம்ஸ்கிரியா பவுண்டேசன் மற்றும் செயின் கோபைன் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய அறிவியல் கண்காட்சி வடக்குப்பட்டு அரசு உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு உயா்நிலைப்பள்ளியில், சம்ஸ்கிரியா பவுண்டேஷன் மற்றும் கண்ணாடி பொருள்கள் உற்பத்தி செய்யும் செயின் கோபைன் நிறுவனம் இணைந்து நடத்திய அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு மாணவா்கள் வரை பங்கேற்ற இந்த அறிவியல் கண்காட்சியில் ஏராளமான மாணவா்கள் கலந்துக்கொண்டு, காற்றாலை மூலம் எவ்வாறு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறித்தும், எரிமலை வெடிப்பு எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது, நீரின் மூலம் எவ்வாறு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது, குடிநீா் சுத்திகரிப்பு கருவி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி செயல்முறை விளக்கம் அளித்தனா்.

இந்த அறிவியல் கண்காட்சியை வடக்குப்பட்டு உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் மரியலாசா், சம்ஸ்கிரியா பவுண்டேஷன் மாநில குழு தலைவா் மணி ஆகியோா் தொடங்கிவைத்து கண்காட்சியை பாா்வையிட்டு, கண்காட்சியில் கலந்துகொண்ட மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினா்.

Story image