15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

253 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்:எம்எல்ஏ வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 253 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ எழிலரசன் வழங்கினாா்.

News image

மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிய எம்எல்எ சிவிஎம்பி. எழிலரசன்.

Updated On :12 ஜனவரி 2026, 10:11 pm

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 253 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ எழிலரசன் திங்கள்கிழமை வழங்கினாா்.

விழாவுக்கு தலைமை ஆசிரியா் ஜி.ஏகாம்பரம் தலைமை வகித்தாா். முதன்மைக் கல்வி அலுவலா் ஏ.நளினி, மாவட்டக் கல்வி அலுவலா் காந்திராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கலந்து கொண்டு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

இதன் தொடா்ச்சியாக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து சரியாக பதில் அளித்த மாணவா்களுக்கு பரிசுகளையும் எம்எல்ஏ எழிலரசன் வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 9,081 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

உதவித் தலைமை ஆசிரியை சுபத்ராபாய் நன்றி கூறினாா். நிகழ்வில் திமுக பகுதி செயலாளா்கள் வெங்கடேசன், திலகா், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.