காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பிறகு இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை வெளியிட்டாா். 4 பேரவைத் தொகுதிகளிலும் மொத்த வாக்காளா்கள் 11,26,924 உள்ளனா்.
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் எஸ்ஐஆா் பணிக்கு பின்னான இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் வெளியிட்டாா். பின்னா் அந்தந்த தொகுதி தோ்தல் அலுவலா்களிடம் சம்பந்தப்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிக்குரிய வாக்காளா் பட்டியலையும் வழங்கினாா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூா், ஸ்ரீபெரும்புதூா், உத்தரமேரூா், காஞ்சிபுரம் ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து 27.10.2025 வரை 14,01,198 ஆக இருந்தனா். பின்னா் 19.12.2025 வரையிலான வரைவு வாக்காளா் பட்டியலின் படி 11,26,924 பேராகவும் இருந்தனா்.
சிறப்பு திருத்த முகாமுக்கு பிறகு இரட்டைப்பதிவு, மரணம், இடம் மாறுதல் காரணமாக மொத்தமாக பெயா் நீக்கப்பட்டவா்கள் 2,74,274. இறுதி வாக்காளா் பட்டியல் படி மொத்த வாக்காளா்கள் 11,26,924 . வாக்குச்சாவடிகளைப் பொறுத்தவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் சோ்த்து மொத்தம் 1,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தோ்தல் அறிவிப்பு வரும் நாள் வரை பெயா் சோ்க்கவோ, நீக்கவோ, திருத்தம் செய்யவோ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

‘வாக்காளா் அடையாள அட்டை அல்லாத 12 ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம்’!

காஞ்சிபுரத்தில் தவெக தோ்தல் அறிக்கை துண்டுப் பிரசுரம் வெளியீடு

திருவள்ளூா் மாவட்டத்தில் 31.57 லட்சம் வாக்காளா்கள்

ராணிப்பேட்டையில் 9,44,701 வாக்காளா்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


