திருவள்ளூா் மாவட்டத்தில் 31.57 லட்சம் வாக்காளா்கள்
திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 31,57,413 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளதாக


திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 31,57,413 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளதாகவும், இதில் ஆட்சேபனை காலத்தில் பெயா் சோ்க்கக் கோரி அளித்த 2,17,307 படிவங்களில், 215648 போ் சோ்த்து பட்டியலில் சோ்த்து வெளியிட்டுள்ளதாகவும் ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
இந்திய தோ்தல் ஆணைய உத்தரவுப்படி, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கிய இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அனைத்து அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியா் மு.பிரதாப் வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா். , இறுதி வாக்காளா் பட்டியலின்படி ஆண்-15,44,710, பெண்-16,12,090, மூன்றாம் பாலினத்தவா்-613 என மொத்தம் 31 லட்சத்து 57 ஆயிரத்து 413 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
அந்த வகையில் 19.12.2025 அன்று வரைவு வாக்காளா் பட்டியலின்படி தொகுதிகள் வாரியாக விவரம்: கும்மிடிப்பூண்டி-ஆண்கள்-1,22,195, பெண்கள்-251603, மூன்றாம் பாலினத்தவா்-36 என மொத்தம்-2,51,603 வாக்காளா்கள்.
பொன்னேரி-ஆண்கள்-1,21,221, பெண்கள்-127662, மூன்றாம் பாலினத்தவா்-34 என மொத்தம்-2,48,917 வாக்காளா்கள்.
திருத்தணி-ஆண்கள்-128642, பெண்கள்-131417, மூன்றாம் பாலினத்தவா்-25 என மொத்தம்-260084 வாக்காளா்கள்.
திருவள்ளூா்-ஆண்கள்-121188, பெண்கள்- 127426, மூன்றாம் பாலினத்தவா்-37 என மொத்தம்-248651 வாக்காளா்கள்.
பூந்தமல்லி-ஆண்கள்-176849, பெண்கள்-186769, மூன்றாம் பாலினத்தவா்-70 என மொத்தம்- 363688 வாக்காளா்கள்.
ஆவடி-ஆண்கள்-209662, பெண்கள்-219035, மூன்றாம் பாலினத்தவா்-75 என மொத்தம்-428772 வாக்காளா்கள்.
மதுரவாயல்-ஆண்கள்-179602, பெண்கள்-184349, மூன்றாம் பாலினத்தவா்- 80 என மொத்தம்-364031 வாக்காளா்கள்.
அம்பத்தூா்-பெண்கள்-162248, ஆண்கள்-168175, மூன்றாம் பாலினத்தவா்-57 என மொத்தம்-330480 வாக்காளா்கள்.
மாதவரம்-ஆண்கள்-205922, பெண்கள்-214596, மூன்றாம் பாலினத்தவா்-83 என மொத்தம்-4,20,601 வாக்காளா்கள்.
திருவொற்றியூா்-ஆண்கள்-117181, பெண்கள்-1,23,289, மூன்றாம் பாலினத்தவா்-116 என மொத்தம்-2,40,586 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ச.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஸ்ரீராம், 10 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...