//

கூழமந்தலில் பூச நட்சத்திர அதி தேவதைக்கு சிறப்பு அபிஷேகம்

கூழமந்தல் மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

News image
பூச நட்சத்திரத்தின் அதி தேவதையான குருபகவான்
Updated On :2 பிப்ரவரி 2026, 7:43 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம்: தைப்பூசத் திருநாளையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் அருகே கூழமந்தலில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் அமைந்திருக்கும் பூச நட்சத்திர அதி தேவதையான குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் கூழமந்தலில் அமைந்துள்ளது 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயில். இக்கோயிலில் உள்ள மூலவருக்கும், 27 நட்சத்திர விருட்ச விநாயகருக்கும், கோயில் வளாகத்திலேயே அமைந்திருக்கும் பூச நட்சத்திரத்தின் அதி தேவதையான குருபகவானுக்கு காலையில் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

கூழமந்தல் மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கூழமந்தல் மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.