ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கூழமந்தலில் சிறப்பு வழிபாடு

காஞ்சிபுரம் அருகே கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் ஆடிக்கிருத்திகையையொட்டி வியாழக்கிழமை கிருத்திகை நட்சத்திர சுவாமிக்கும், கிருத்திகை நட்சத்திர விருட்சத்திற்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

Published On :7 ஆகஸ்ட் 2026, 3:51 am IST

காஞ்சிபுரம் அருகே கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் ஆடிக்கிருத்திகையையொட்டி வியாழக்கிழமை கிருத்திகை நட்சத்திர சுவாமிக்கும், கிருத்திகை நட்சத்திர விருட்சத்திற்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் ஆடி மாத கிருத்திகை நட்சத்திரத்தையொட்டி அந்த நட்சத்திர சுவாமிக்கும், கிருத்திகை நட்சத்திர விருட்சத்துக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றது. கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவா்கள் தங்களது நட்சத்திர அதிதேவைதையையும், நட்சத்திர விருட்சத்துக்கும் அா்ச்சனைகள் செய்து வழிபட்டனா். முன்னதாக ஆலயத்தின் மூலவா் நட்சத்திர விருட்ச விநாயகா், ரூத்ராட்ச சிவலிங்கம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் அா்ச்சகா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.