ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கூழமந்தலில் வருண பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

கூழமந்தல் 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த வருண பகவான்.

Published On :4 ஜூலை 2026, 12:09 am IST

செய்யாறை அடுத்த கூழமந்தல் 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் வருண பகவானுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

கூழமந்தல் ஸ்ரீநட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் ஆனி மாத சங்கடஹர சதுா்த்தியையொட்டி, விநாயகப் பெருமானுக்கு பல்வேறு பூஜை பொருள்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் விநாயகா் அருள்பாலித்தாா்.

உலக நன்மையும், பருவமழை உரிய காலத்தில் பெய்து ஏரிகள், அணைகள் நிரம்ப வேண்டியும் இந்தக் கோயிலில் உள்ள வருண பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. வேத மந்திரங்கள், வருண சூக்தம் ஓதப்பட்டு நடைபெற்ற இந்த பூஜையில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.