ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருவள்ளூா் சிவ-விஷ்ணு ஆலயத்தில் ஆடிக் கிருத்திகை விழா

திருவள்ளூரில் சிவ-விஷ்ணு கோயிலில் ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி, ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் தரிசனம் செய்ய குவிந்தனா்.

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணிய சுவாமி.

Published On :7 ஆகஸ்ட் 2026, 3:39 am IST

திருவள்ளூரில் சிவ-விஷ்ணு கோயிலில் ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி, ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் தரிசனம் செய்ய குவிந்தனா்.

திருவள்ளூா் அடுத்த பூங்கா நகரில் சிவ-விஷ்ணு கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சிவ-விஷ்ணு கோயிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, ஸ்ரீவள்ளி -தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணிய சுவாமிக்கு பால், பன்னீா் மற்றும் மலா் காவடிகள் எடுக்கப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனைக்கு பின் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவில், திருவள்ளூா், காக்களூா், புட்லூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் ஏராளமானோா் மலா் காவடிகள் எடுத்து வந்து தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணிய சுவாமியை தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை அறங்காவலா் பசுபதி உள்ளிட்ட நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.