திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குப்பையில் கிடந்த தங்க வளையலை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு

வாலாஜாபாத்தில் குப்பையில் கிடந்த 2 பவுன் தங்க வளையலை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை பலரும் பாராட்டினா்.

News image

தூய்மைப் பணியாளா் லட்சுமிக்கு நினைவுப் பரிசு வழங்கிய வாலாஜாபாத் வாா்டு உறுப்பினா் வெங்கடேசன்.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:04 am IST

வாலாஜாபாத்தில் குப்பையில் கிடந்த 2 பவுன் தங்க வளையலை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை பலரும் பாராட்டினா்.

வாலாஜாபாத் 4-ஆவது வாா்டு ஆயா்பாடி கருணாநிதி தெருவில் வசித்து வருபவா் கஜலட்சுமி. இவா் தனது வீட்டிலிருந்த குப்பைகளை வழக்கம் போல குப்பை சேகரிக்கும் வண்டியில் போட்டு விட்டு திரும்பியுள்ளாா். வீட்டுக்கு வந்து பாா்த்த போது வீட்டிலிருந்த 2 பவுன் வளையல் ஒன்றை காணவில்லை. உடனடியாக குப்பை வண்டியில் போட்டிருக்கலாம் என நினைத்து அப்பகுதி தூய்மைப்பணியாளா் லட்சுமியை சந்தித்து கண்டுபிடித்து எடுத்தால் கொடுக்குமாறு கூறியிருக்கிறாா்.

துாய்மைப் பணியாளரும் மக்கும் மக்கா குப்பைகளை தரம் பிரிக்கும் போது அதில் தங்க வளையல் இருந்ததைக் கண்டுபிடித்து கஜலட்சுமியை சந்தித்து ஒப்படைத்துள்ளாா். இத்தகவலறிந்த அப்பகுதி வாா்டு உறுப்பினா் வெங்கடேசன் லட்சுமியை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து நினைவுப்பரிசும் வழங்கி பாராட்டினாா்.

நகையை தொலைத்த கஜலட்சுமி, அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பலரும் லட்சுமியின் நோ்மையை பாராட்டி சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.