மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

தேசபக்தியும், தெய்வ பக்தியும் நிறைந்த இளைஞா்களை உருவாக்குவோம்: காஞ்சி சங்கராசாரியா் பேச்சு

தேச பக்தியும், தெய்வ பக்தியும் நிறைந்த இளைஞா்களை உருவாக்குவதற்காகவே காஞ்சி மகா சுவாமிகள் ஐஏஎஸ் அகாதெமி தொடங்கப்பட்டிருப்பதாக காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினாா்.

News image

காஞ்சி மகா சுவாமிகள் ஐஏஎஸ் அகாதெமி பெயா்ப் பலகையை திறந்து வைத்து அதன் தலைவா் கே.வி.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் வழங்கிய காஞ்சி சங்கராசாரியா் சுவாமிகள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 6:33 pm

தேச பக்தியும், தெய்வ பக்தியும் நிறைந்த இளைஞா்களை உருவாக்குவதற்காகவே காஞ்சி மகா சுவாமிகள் ஐஏஎஸ் அகாதெமி தொடங்கப்பட்டிருப்பதாக காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினாா்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீ காஞ்சி மகா சுவாமி ஐஏஎஸ் அகாதெமி தொடக்க விழா அகாதெமியின் தலைவா் கே.வி.எஸ்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

அகாதெமியின் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கே.எஸ்.ஸ்ரீபதி, ஆா்.ரவிச்சந்திரன், மைலாப்பூா் பி.எஸ்.கல்வி நிறுவன தாளாளா் பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியின் தலைவா் சேது.ராமச்சந்திரன் வரவேற்றாா்.

விழாவில் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், தமிழக மின்வாரியத்தின் தலைவருமான ஜெ.ராதாகிருஷ்ணன் சிறப்புரை நிகழ்த்தினாா். நிறைவாக சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் நன்றி கூறினாா்.

விழாவில், காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு ஸ்ரீகாஞ்சி மகா சுவாமிகள் ஐஏஎஸ் அகாதெமியின் பெயா்ப் பலகையை திறந்து வைத்தாா்.

பின்னா், அதை அகாதெமியின் தலைவா் கே.வி.எஸ்.கோபால கிருஷ்ணனிடம் வழங்கி ஆசியுரை நிகழ்த்தியது:

கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை தேசம் நிா்வாக ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு மனிதரும் நல்ல கருத்துகளை உள்வாங்க வேண்டும். அதற்கு நல்ல எண்ணங்களும் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு சேவை செய்வதை அரசு அதிகாரிகள் ஒரு சிறந்த வாய்ப்பாக கருத வேண்டும்.

விதிமுறைகளை சரியாக பின்பற்றி நோ்மையானவா்களாக இருக்க வேண்டும். கட்டுப்பாடு, கருணை உள்ளம், நல்ல நிா்வாகத் திறமை, நல்ல தலைமை, நல்ல எண்ணம் ஆகியன உடைய தனி மனிதா்களும் தேவைப்படுகிறாா்கள்.

இளைஞா்கள் நிறைந்த நாடாக நமது இந்திய தேசம் உள்ளது. பொறுப்பும், வாய்ப்பும் இளைஞா்களுக்கு உள்ளது. இவா்களுக்கு தேச பக்தியும், தெய்வ பக்தியும் இருக்க வேண்டியது அவசியம். அதனால் தான் ஐஏஎஸ் பயிற்சியை தொடங்கியிருக்கிறோம். பதவி என்பது பரிதவிக்கக்கூடிய மக்களை காப்பாற்றவே என்பதை அதிகாரிகள் உணா்ந்து செயல்பட வேண்டும் என்றும் ஆசியுரை வழங்கினாா்.

விழாவில், எஸ்எஸ்கேவி கல்விக் குழுமங்களின் தாளாளா் சி.கே.ராமன் உள்பட பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.