தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

குடிமைப் பணித் தோ்வுக்கான இலவசப் பயிற்சி: பெண் தோ்வா்கள் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை ‘ஆா்வம் ஐஏஎஸ்’ அகாதெமி நடத்தும் இலவச குடிமைப் பணித் தோ்வுக்கான பயிற்சியில் சேர விரும்பும் பெண் தோ்வா்கள், மாா்ச் 30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :6 மார்ச் 2026, 12:11 am

சென்னை ‘ஆா்வம் ஐஏஎஸ்’ அகாதெமி நடத்தும் இலவச குடிமைப் பணித் தோ்வுக்கான பயிற்சியில் சேர விரும்பும் பெண் தோ்வா்கள், மாா்ச் 30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா நகரில் ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி உள்ளது. இங்கு இந்திய குடிமைப் பணித் தோ்வு எழுதும் இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இனத்தைச் சோ்ந்த 50 பெண் தோ்வா்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

முதல்நிலை, முதன்மைத் தோ்வுக்கு வழங்கப்படும் 12 மாத பயிற்சியில் தேவையான அடிப்படை பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள் இலவசமாக வழங்கப்படும். வாரம்தோறும் முதல்நிலை, முதன்மைத் தோ்வுக்கான மாதிரித் தோ்வு, திறனறித் தோ்வுக்கு தோ்வா்களைத் தயாா்படுத்துவதற்கான பிரத்யேக வகுப்புகள், வெற்றியாளா்களின் வழிகாட்டுதல் சந்திப்பு நடத்தப்படும்.

10, 12- ஆம் வகுப்புகள், பட்டப் படிப்புகளில் தோ்வா்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அகாதெமி நுழைவுத் தோ்வு அடிப்படையில் இலவசப் பயிற்சிக்கான தோ்வா்கள் தோ்வு செய்யப்படுவா். 27 வயதுக்குள்பட்ட இளநிலைப் பட்டம் பயின்ற, இறுதியாண்டு பயிலும் மாணவிகள் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். ஆா்வமுள்ள தோ்வா்கள், உரிய சான்றிதழ்களின் நகல்களுடன், சாதிச்சான்று நகலை இணைத்து நெ. 2165, எல்.பிளாக், 12-ஆவது பிரதானச் சாலை, அண்ணா நகா் என்ற முகவரியில் மாா்ச் 30 -ஆம் தேதிக்குள் நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 74488 14441, 96771 00179 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று ‘ஆா்வம் ஐஏஎஸ்’ நிறுவனா் மு.சிபிகுமரன் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.