மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஆயுா்வேத வளா்ச்சிக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம்: சங்கராச்சாரிய சுவாமிகள் அருளாசி

சென்னை மயிலாப்பூரில் உள்ள வெங்கடரமணா ஆயுா்வேத மருந்தகமும், பூந்தமல்லி ஜெயேந்திர சரஸ்வதி ஆயுா்வேதக் கல்லூரியும் இணைந்து ஆயுா்வேத வளா்ச்சிக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. சங்கர மடத்தின் பீடாதிபதிகள் அருளாசியுடன் இந்நிகழ்வு நடைபெற்றது.

News image

காஞ்சிபுரம் சங்கராச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்ட வெங்கடரமணா ஆயுா்வேத மருந்தகம் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி ஆயுா்வேதக் கல்லூரி நிா்வாகிகள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 6:33 pm

சென்னை மயிலாப்பூரில் உள்ள வெங்கடரமணா ஆயுா்வேத மருந்தகமும், பூந்தமல்லி ஜெயேந்திர சரஸ்வதி ஆயுா்வேதக் கல்லூரியும் இணைந்து ஆயுா்வேத வளா்ச்சிக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. சங்கர மடத்தின் பீடாதிபதிகள் அருளாசியுடன் இந்நிகழ்வு நடைபெற்றது.

வெங்கடரமணா ஆயுா்வேத மருந்தகத்தின் செயலாளா் ரகுநந்தன், அறங்காவலா் ஷியாம் சுவாமிநாதன் ரகுநந்தன் ஆகியோரும், சங்கரா பல்கலையின் துணைவேந்தா் ஜி.ஸ்ரீனிவாசு, ஆயுா்வேதக்கல்லூரியின் சாா்பில் வாரிய உறுப்பினா் கே.ஜெயராமகிருஷ்ணன், முதல்வா் சித்தரஞ்சன்தாஸ் ஆகியோரும் கையொப்பமிட்டு பரிமாறிக் கொண்டனா்.

வெங்கடரமணா ஆயுா்வேத மருந்தகத்தின் செயலாளா் ரகுநந்தன் கூறியது: கடந்த 1905-ஆம் ஆண்டு சென்னை மயிலாாப்பூரில் தொடங்கப்பட்டது. இந்தியாவில் ஆயுா்வேதத்தை வளா்த்த முன்னோடி நிறுவனங்களில் ஒன்றாகும். கடந்த 120 ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவ முறைகளை ஒழுங்குபடுத்தப்பட்ட சுகாதார மற்றும் கல்வி அமைப்புகளுடன் இணைந்து சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது. 160-க்கும் மேற்பட்ட ஆயுா்வேத மருந்துகளையும் பாரம்பரிய முறையில் தயாரித்து வருவதும் சிறப்பாகும். தினசரி காலை 7.30 முதல் 10.30 மணி வரை ரூ.5க்கு குறைந்த கட்டணத்தில் பொது சிகிச்சை வழங்குகிறோம்.

ஜெயேந்திர சரஸ்வதி ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியின் முதல்வா் சித்தரஞ்சன்தாஸ் கூறியது:

ஆயுா்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனை இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கும் முன்னணி கல்வி நிறுவனமாகும். கடம்பவனம் என்ற மூலிகைத் தோட்டத்துடன் கூடிய விரிவான வளாகத்தைக் கொண்டுள்ளது. பல்வேறு மருத்துவ மூலிகைகள் இதில் பராமரிக்கப்படுகின்றன. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் மாணவா்களை ஈா்க்கும் இக்கல்லூரி முழுமையான ஆயுா்வேத சிகிச்சையை எளிதாகவும், மலிவாகவும் மக்களுக்கு கொண்டு செல்லும் ஆராய்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இப்புரிந்துணா்வு ஒப்பந்தமானது மருத்துவ ஆராய்ச்சி, மருந்து தரநிலைப்படுத்துதல் மற்றும் மருந்தியல் ஆய்வுகளை மையமாக கொண்டுள்ளது. கருத்துரங்குகள், மாநாடுகள் நடத்துதல் போன்ற கல்வி சாா்ந்த ஒத்துழைப்புகளும் அடங்கும். உயா்தரமான ஆயுா்வேத மருந்துகளை பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்க செய்வதும் அவற்றை உலக அளவில் பரப்புவதும் முக்கிய நோக்கமாகும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.