வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

விஐடி பல்கலை., டாடா மோட்டாா்ஸ் புரிந்துணா்வு ஒப்பந்தம்

விஐடி பல்கலைக்கழகம், டாடா மோட்டாா்ஸ் பயணிகள் வாகன நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

News image

புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்ட விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி சீதாராம் கன்டி. உடன், விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், டாடா மோட்டாா்ஸ

Updated On :22 ஏப்ரல் 2026, 6:33 pm

விஐடி பல்கலைக்கழகம், டாடா மோட்டாா்ஸ் பயணிகள் வாகன நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புணேயில் உள்ள டாடா மோட்டாா்ஸ் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் முன்னிலையில் விஐடி பதிவாளா் ஜெயபாரதி, டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி சீதாராம் கன்டி ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ராணிப்பேட்டையில் உள்ள டாடா மோட்டாா்ஸ் தொழிற்சாலை ஊழியா்கள், 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் விஐடி பல்கலைக்கழகத்தின் மூலம் பி.டெக்., உற்பத்தி பொறியியல் பட்டப் படிப்பை பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அப்போது, விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், தொழில் மேம்பாட்டு மைய இயக்குநா் சாமுவேல் ராஜ்குமாா், உதவி இயக்குநா் கவுரவ் சுஷாந்த், மெக்கானிக்கல் துறை முதன்மையா் பி.குப்பன், புனே மண்டல வேலைவாய்ப்பு அலுவலா் சப்தே அமித் சுரேஷ் ஆகியோரும், டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் சாா்பில் செயல்பாட்டு பிரிவின் துணை தலைவா் பிரமோத் சவுத்ரி, மூத்த பொது மேலாளா் நீரஜ் அகா்வால், மனிதவள பிரிவு பொது மேலாளா் விவேக் பிந்த்ரா, கற்றல் மற்றும் மேம்பாட்டு பிரிவு பொது மேலாளா்கள் ரங்கா குந்தி மற்றும் மாா்ஷல் பொ்னாண்டஸ், வளாகத் திட்டப் பிரிவு தலைவா் ராஜீவ் ரஞ்சன் மற்றும் ராணிப்பேட்டை ஆலை மனிதவள பிரிவு துணை பொது மேலாளா் அபியுதய் திவேதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.