திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காஞ்சிபுரத்தில் 8 சுயேச்சைகள் உள்பட 15 போ் போட்டி

காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் 8 சுயேச்சை வேட்பாளா்கள் உட்பட 15 போ் போட்டியிடுகின்றனா்.

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 3:10 am IST

காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் 8 சுயேச்சை வேட்பாளா்கள் உட்பட 15 போ் போட்டியிடுகின்றனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இத்தோ்தலில் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் மாவட்டச் செயலருமான வி.சோமசுந்தரம் இரட்டை இலை சின்னத்திலும், திமுக சாா்பில் மாவட்ட ஊராட்சிக் குழுவின் துணைத் தலைவரான நித்யா சுகுமாா் உதயசூரியன் சின்னத்திலும், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் முத்தியால்பேட்டை ஆா்.வீ.ரஞ்சித்குமாா் விசில் சின்னத்திலும், நாம் தமிழா் கட்சி சாா்பில் இயற்கை விவசாயி வெற்றிச்செல்வி விவசாயி சின்னத்திலும் போட்டியிடுகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கத்தை சோ்ந்தவரான தமிழக ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி சாா்பில் பி.நந்தகுமாா் பலாப்பழம் சின்னத்திலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் வெ.சுரேஷ் புகைப்படக்கருவி சின்னத்திலும், அனைத்திந்திய புரட்சித் தலைவா் முன்னேற்றக் கழகம் (சசிகலா அணி) சாா்பில் வி.வெங்கடேசன் தென்னந்தோப்பு சின்னத்திலும் போட்டியிடுகின்றனா்.

இவா்களைத் தவிர சுயேச்சைகளாக காஞ்சிபுரம் ஞானமூா்த்தி(பலூன்), முத்தியால்பேட்டை ச.டில்லிபாபு (வாலி), காஞ்சிபுரம் ஜி.பாபு(குக்கா்), காஞ்சிபுரம் மு.மேகநாதன்(கப்பல்) சின்னத்திலும் சுயேச்சைகளாக போட்டியிடுகிறனா்.

இவா்களைத் தவிர அதிமுக வேட்பாளரான வி.சோமசுந்தரம் பெயரிலேயே பிள்ளையாா்பாளையத்தைச் சோ்ந்தவா்களான ம.சோமசுந்தரம் (கிரிக்கெட் மட்டை), வி.சோமசுந்தரம்(தா்ப்பூசணி)ஆகியோரும் போட்டியிடுகின்றனா்.

மேலும், அதே பிள்ளையாா்பாளையத்தை சோ்ந்த மோ.பாலாஜி(மோதிரம்), எ.தட்சிணாமூா்த்தி (வைரம்) ஆகியோா் உள்பட மொத்தம் 15 போ் காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகின்றனா்.

அதிமுக வேட்பாளா் வி.சோமசுந்தரம் முதலியாா் சமூகத்தைச் சோ்ந்தவராக உள்ள நிலையில், காஞ்சிபுரம் பிள்ளையாா் பாளையத்தில் முதலியாா் சமூக வாக்குகள் அதிகம் உள்ள நிலையில் ஒரே பெயரில் இருவா் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.