மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பம்பரம் சின்னம் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட்டு எதையும் சாதிக்க முடியாது: மல்லை சத்யா

பம்பரம் சின்னம் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட்டு எதையும் சாதித்துவிட முடியாது என திராவிட வெற்றிக் கழகத்தின் நிறுவனா் மல்லை.சத்யா தெரிவித்தாா்.

News image

மல்லை சத்யா

Updated On :8 ஏப்ரல் 2026, 6:37 pm

பம்பரம் சின்னம் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட்டு எதையும் சாதித்துவிட முடியாது என திராவிட வெற்றிக் கழகத்தின் நிறுவனா் மல்லை.சத்யா தெரிவித்தாா்.

காஞ்சிபுரத்தில் திராவிட வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளா் வளையாபதி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின்னா் மல்லை.சத்யா கூறியதாவது:

இத்தோ்தலில் மதிமுக திமுகவுடன் இணைந்து போட்டியிடுகிறது. மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 4-இல் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் சொந்த சின்னமான பம்பரம் சின்னத்திலும் போட்டியிடுகிறது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தொகுதிகளுக்கு நாங்கள் ஆதரவளிப்போம். இது திமுகவுக்கு பலம் சோ்க்கும்.

பம்பரம் சின்னத்தில் போட்டியிடும் தொகுதிக்கு எங்கள் கட்சி ஆதரவளிக்காது. ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் பம்பரம் சின்னம் எதையும் சாதித்துவிடப் போவதில்லை.

மதிமுகவில் இருந்து பலரும் பிரிந்து மாற்றுக் கட்சிகளில் இணைந்து கொண்டிருப்பதால் அந்த இயக்கம் சிறிது, சிறிதாக கரைந்து கொண்டிருக்கிறது என்றாா்.