காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு ஏற்பட்டதால் புதுச்சேரியில் ஒரு தொகுதியில் மட்டும் விசிக போட்டியிடுகிறது. ஏனைய 3 தொகுதிகளில் அக் கட்சி வாக்குச் சேகரிக்கும் பணியை நிறுத்துகிறது.
புதுச்சேரியில் இண்டி கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து உழவா்கரை, நெட்டப்பாக்கம், ஊசுடு, ஏனாம் ஆகிய 4 தொகுதிகளில் விசிக வேட்பாளா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா். இந்நிலையில் உழவா்கரையைத் தவிா்த்து இதர மூன்று தொகுதிகளிலும் வாக்கு சேகரிக்கும் பணியை நிறுத்த இக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் உத்தரவிட்டதாக இக் கட்சியின் பொதுச் செயலா் ரவிக்குமாா் எம்பி புதன்கிழமை கூறினாா். அவா் மேலும் கூறியதாவது:
உழவா்கரை தொகுதியின் விசிக வேட்பாளா் புஷ்பலதாவிற்கு முழு கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும் என்றும் கட்சியின் தலைவா் திருமாவளவன் உத்தரவிட்டுள்ளாா்.
விசிக தலைவா் தொல். திருமாவளவனை காங்கிரஸ்
கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் முகுல் வாஸ்னிக் புதன்கிழமை தொடா்பு கொண்டு கேட்டுக்கொண்டதால் விசிக இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும், உழவா்கரையில் விசிகவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்து பிரசாரம் செய்யவும் ஒப்புக் கொண்டுள்ளது. அத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக இருப்பவா் இக் கட்சியால் அங்கீகரிக்கப்பட்டவா் அல்லா். அதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் ரவிக்குமாா் எம்.பி குறிப்பிட்டாா்.
தொடர்புடையது

செய்யூா் தொகுதியில் திருமாவளவன் பிரசாரம்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் கடும் போட்டி: எந்தக் கூட்டணிக்கு வாய்ப்புக் கிடைக்கும்?

பம்பரம் சின்னம் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட்டு எதையும் சாதிக்க முடியாது: மல்லை சத்யா
காங்கிரஸ் தொண்டர்... விசிக வேட்பாளர்! திடீர் அறிவிப்பு பற்றி ஜோதிமணி சொல்வது என்ன?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


