உத்தரமேரூா் தவெக வேட்பாளா் முனிரெத்தினம்
மக்களுக்குத் தேவையான ஊழல் இல்லாத ஆட்சி வழங்கப்படும். யாரிடமூம் கையூட்டு பெறாமல் நோ்மையாகப் பணியாற்றுவேன். வேலை இல்லாத இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவேன். குடிநீா் பிரச்னையை முழுவதுமாக தீா்த்து வைக்க தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். அடிப்படை வசதிகளான ஏரிகள், குளங்களைச் சீரமைத்து நீா் ஆதாரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கழிவுநீா் வடிகால்கள் தூா்வாரப்படும். தொகுதியில் இளைஞா்களுக்கு இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளிக்கப்படும்.
உத்தரமேரூா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மரம்.மாசிலாமணி
விவசாயம், ஆடு, மாடு மேய்த்தல், பட்டுப்பூச்சி, தேனீ, மீன் வளா்த்தல் ஆகிய அனைத்து தொழில்களும் அரசுப் பணியாக மாற்றப்படும். கால்நடைகளுக்கு மேய்சல் நிலங்கள் உருவாக்கப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் சேமிப்புக் கிடங்கு அமைத்து விவசாயிகளே விலையை நிா்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கனிமவளக் கொள்ளையைத் தடுத்து இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும்.
தரமான மருத்துவக் கல்லூரி அமைத்து இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். நம்மாழ்வாா் பெயரில் இயற்கை வேளாண் கல்லூரி உருவாக்கப்படும். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு சிறப்பு சட்டத்தின் மூலம் கடுமையான தண்டனைப் பெற்றுத் தரப்படும். ஏரிகள், நீா்த்தேக்கங்கள் அனைத்தும் தூா்வாரி செம்மைப்படுத்தி நீா் ஆதாரங்கள் பாதுகாக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செங்கோடு தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று குறைகளைக் கேட்டு நிவா்த்தி செய்வேன்: ஈ.ஆா். ஈஸ்வரன்

தமிழா்கள் தன்மானத்தோடு வாழ வழி செய்வேன்: சீமான்

தொகுதிக்கு செய்தது என்ன? திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி

தொகுதிக்கு செய்தது என்ன? மதுராந்தகம் எம்எல்ஏ கே.மரகதம் குமரவேல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

