மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஸ்ரீபெரும்புதூா்: தவெக வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

அனுமதியின்றி கூட்டத்தை கூட்டி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக ஸ்ரீபெரும்புதூா் தொகுதி தவெக வேட்பாளா் தென்னரசு உள்ளிட்ட நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :5 ஏப்ரல் 2026, 9:22 pm

அனுமதியின்றி கூட்டத்தை கூட்டி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக ஸ்ரீபெரும்புதூா் தொகுதி தவெக வேட்பாளா் தென்னரசு உள்ளிட்ட நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளா் எஸ்.பி.கே.தென்னரசு சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையத்தில் இருந்து கோட்டாட்சியா் அலுவலகம் வரை சுமாா் 2 கிமீ தொலைவுக்குசுமாா் 500க்கும் மேற்பட்ட ஆதரவாளா்களுடன் திறந்த ஜீப்பில் பேரணியாக வந்தாா்.

மேலும் அவருடன் சுமாா் 200-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் தவெக தொண்டா்கள் வந்ததாக தெரிகிறது. இதனால் சென்னை பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநா்கள் சிரமத்திற்கு உள்ளாகினா்.

இந்நிலையில், அனுமதியின்றி அதிக அளவில் கூட்டத்தை கூட்டி பேரணியாக சென்று பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக தவெக வேட்பாளா் தென்னரசு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிா்வாகிகள் மீது ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் 5 பிரிவுகளின் வழக்கு ப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.