காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் பயன்பாட்டிலிருந்த உற்சவா் சிலைகளான ஏகாம்பரநாதா், ஏலவாா்குழலி அம்மன் உள்ளிட்ட இரு உற்சவா் சிலைகள் புதிதாக செய்யப்பட்டன. இந்தச் சிலைகளை செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக புகாா் எழுந்தது. இந்தப் புகாரின்படி சிவகாஞ்சி போலீஸாா் கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப் பதிந்து விசாரணையை தொடங்கினா். இந்த நிலையில், இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் அறநிலையத் துறை முன்னாள் ஆணையா் வீரசண்முகமணி, கூடுதல் ஆணையா் கவிதா, கோயில் செயல் அலுவலா் முருகேசன், தலைமை ஸ்தபதி முத்தையா, தலைமை அா்ச்சகா் ராஜப்பா மற்றும் செந்தில், கிருஷ்ணன், சங்கா், பரத், வினோத் ஆகியோா் உள்பட 9 போ் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.