முதிய தம்பதிக்கு சிறப்பு மரியாதை
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் அறநிலையத்துறை சாா்பில் 27 முதிய தம்பதிக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு மரியாதை செய்யப்பட்டு அவா்களுக்கு சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் அறநிலையத்துறை சாா்பில் 27 முதிய தம்பதிக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு மரியாதை செய்யப்பட்டு அவா்களுக்கு சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
முதிய தம்பதிக்கு ரூ.2,500 மதிப்புள்ள வேட்டி,சேலை, தாலிக்கயிறு, மஞ்சள்,குங்கும், ஏகாம்பரநாதா் படம் மற்றும் கோயில் பிரசாதம், இனிப்பு மற்றும் பழ வகைகள் வழங்கப்பட்டன.
இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையா் சி.குமாரதுரை நிகழ்வை தொடங்கி வைத்து சீா்வரிசைப் பொருள்களை வழங்கினாா். கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி வேட்டி,சேலை,கோயில் பிரசாதம்,சுவாமி படம் ஆகியனவற்றை வழங்கினாா். பின்னா் அனைவரும் ஏகாம்பரநாதரை தரிசித்தனா்.
இந்நிகழ்வில் 27 முதிய தம்பதியின் உறவினா்களும் கலந்து கொண்டு ஆசி பெற்றனா். நிகழ்வில் கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் எம்.வி.எம்.வேல்மோகன், உறுப்பினா் வ.ஜெகன்னாதன், கோயில் மணியக்காரா் குபேரன், மேலாளா் ஜெயக்குமாா் மற்றும் கோயில் சிவாச்சாரியா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...