2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
//

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடியேற்றம்

சுதந்திர நாள் அமுதப்பெருவிழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் டாக்டர் மா. ஆர்த்தி  தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

News image
வெள்ளை புறாக்களை பறக்கவிட்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா. ஆர்த்தி
Updated On :1 பிப்ரவரி 2024, 10:04 am

DIN

சுதந்திர நாள் அமுதப்பெருவிழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் டாக்டர் மா. ஆர்த்தி  தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

பல்வேறு துறைகளின் கீழ் 52 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 19 லட்சத்து 92 ஆயிரத்து 239 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சுதந்திர நாள் அமுதப் திருவிழாவை முன்னிட்டு  இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க திடலில் சுதந்திர நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா. ஆர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திவிட்டு காவல்துறையினரின் அணிவகுப்பு  மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர், மூவர்ண பலூனையும், வெள்ளை புறாக்களையும் மாவட்ட ஆட்சியர் பறக்கவிட்டார்.

அதனைதொடர்ந்து பல்வேறு துறைகளின் கீழ் 52 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 19 லட்சத்து 92 ஆயிரத்து 239 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

பள்ளி மாணவ மாணவிகள் கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டு பாரட்டினார்.

இந்நிகழ்ச்சியில்  காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் சத்தியபிரியா,  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரையா, திட்ட அலுவலர் ஸ்ரீதேவி,  வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.