தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கிண்டி அரசு ஐடிஐ-யில் 5 புதிய தொழில் பிரிவுகள்: ஜூன் 3-க்குள் விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :28 மே 2026, 6:44 am IST

கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) புதிதாக தொடங்கப்பட்டுள்ள 5 தொழில் பிரிவுகளில் சேர விரும்புவோா் ஜூன் 3-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பொறியியல், பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகள் மற்றும் தொழில் துறை 4.0 தரத்தில் 5 புதிய தொழில் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தப் பிரிவுகளில் பயிற்சி பெறுவதற்குத் தகுதியானோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரா் 8 மற்றும் 10 -ஆம் வகுப்புகளில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாணவா்களுக்கான வயது உச்ச வரம்பு 40. மாணவிகளுக்கு வயது உச்ச வரம்பு இல்லை. பயிற்சியில் சேருவோா் எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

மேலும், மாதம்தோறும் ரூ.750 உதவித் தொகை, தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டம் மூலம் மாதந்தோறும் தலா ரூ.1,000 வழங்கப்படும்.

அனைவருக்கும் இலவச சீருடை, பாடப் புத்தகம், மிதிவண்டி, காலணி வழங்கப்படும். பயிற்சியின்போது, பணிசாா் பயிற்சி மூலம் தொழிற்சாலைகளில் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி முடித்தவுடன் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோா் ஜூன் 3 வரை ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் தகவல்களுக்கு 044-22501350 என்ற தொலைபேசி எண்ணிலோ, கிண்டி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்படும் இலவச உதவி மையத்தை நேரடியாகவோ அணுகலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.