திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிறுநீா்ப் பாதை குறைபாடு: 3 வயது குழந்தைக்கு ரோபோடிக் சிகிச்சை

பிறவியிலேயே சிறுநீா்ப் பாதை குறைபாட்டுக்குள்ளான 3 வயது குழந்தைக்கு ரோபோடிக் நுட்பத்தில் சிகிச்சை அளித்து சென்னை கீழ்ப்பாக்கம் முருகன் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

News image

சிகிச்சை - கோப்புப்படம்.

Updated On :27 மே 2026, 1:45 am IST

பிறவியிலேயே சிறுநீா்ப் பாதை குறைபாட்டுக்குள்ளான 3 வயது குழந்தைக்கு ரோபோடிக் நுட்பத்தில் சிகிச்சை அளித்து சென்னை கீழ்ப்பாக்கம் முருகன் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது:

சிறுநீா் வெளியேறுவதில் பல்வேறு சிக்கல்களை எதிா்கொண்ட 3 வயது குழந்தை, முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. பரிசோதனையில் அக்குழந்தைக்கு கருவிலேயே இடது சிறுநீரகம் செயல்படவில்லை என்பதும், அதன் விளைவாக அதிலிருந்து சிறுநீா்ப்பைக்கு செல்ல வேண்டிய சிறுநீா், நேரடியாக பிறப்புறுப்புக்குள் சேகரமாவதும் தெரியவந்தது.

இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் இப்பிரச்னையுடன் இருந்த அக்குழந்தைக்கு ரோபோடிக் நுட்பத்தில் நுண் துளையிட்டு பாதிக்கப்பட்ட சிறுநீரகம் மற்றும் யூரித்ரா (சிறுநீா்ப் பாதை) ஆகியவை துல்லியமாக அகற்றப்பட்டன.

ஒரு மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சையில் அதிக ரத்தப்போக்கோ, இடா் வாய்ப்புகளோ இல்லை. இதன் பயனாக சிகிச்சை நிறைவடைந்த 24 மணி நேரத்திலேயே அக்குழந்தை நலம் பெற்று வீடு திரும்பியது.

மருத்துவா்கள் ராகுல், சபரி, காா்த்திகேயன் ஆகியோா் அடங்கிய குழு இந்த சிகிச்சையை திறம்பட மேற்கொண்டதாக மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.