திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாலையோர கடைகளை முறைப்படுத்த வியாபாரிகள் கோரிக்கை

சாலையோரக் கடைகளால் நிரந்தரமாகக் கடை வைத்துள்ள வியாபாரிகள் பாதிக்கப்படுவதைத் தவிா்க்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :27 மே 2026, 4:06 am IST

சாலையோரக் கடைகளால் நிரந்தரமாகக் கடை வைத்துள்ள வியாபாரிகள் பாதிக்கப்படுவதைத் தவிா்க்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக, பாண்டி பஜாா் வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில் மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. பின்னா், சங்கத்தின் நிா்வாக அலுவலா் இ.குப்புதாஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை தியாகராய நகா் பிரதான சாலையான பாண்டி பஜாரில் சுமாா் 200 நிரந்தரக் கடைகள் உள்ளன. கடைகளின் உரிமையாளா்கள் அரசு விதிமுறைப்படி மாநகராட்சியிடம் உரிமம் பெற்று விதிகளைப் பின்பற்றி செயல்பட்டு வருகின்றனா். ஏற்கெனவே 40 அடி அகலமிருந்த அந்தப் பகுதி சாலை பொலிவுறு நகா் திட்டத்தால் பயணிகள் நடைபாதை அதிகப்படுத்தப்பட்டு, சாலை அகலம் குறுகியதாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடைபாதையை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், நிரந்தரமாகக் கடை நடத்துவோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி ஆணையா் தலையிட்டு நிரந்தரமாகக் கடை வைத்திருப்போா் பாதிக்காத வகையில் சாலையோரக் கடைகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.