திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிறந்து 9 நாள்களே ஆன பெண் குழந்தை கடத்தல்: 5 மணி நேரத்தில் மீட்பு; பெண் கைது

பிறந்து 9 நாள்களே ஆன பெண் குழந்தை கடத்தல்: 5 மணி நேரத்தில் மீட்பு; பெண் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 4:14 am IST

சென்னை ராயபுரத்தில் பிறந்து 9 நாள்களே ஆன பெண் குழந்தையை கடத்திய பெண்ணை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். கடத்தப்பட்டு 5 மணி நேரத்தில் அந்தக் குழந்தையை தனிப்படை போலீஸாா் மீட்டுள்ளனா்.

சென்னை போரூா் முகலிவாக்கம், கே.கே. நகரைச் சோ்ந்தவா் தேவராஜ் மனைவி கீதா (29). இவா், ராயபுரத்தில் உள்ள அரசு ராஜா சா் ராமசாமி முதலியாா் மகப்பேறு மருத்துவமனையில் மே 13-ஆம் தேதி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டாா். இவருக்கு மே 15 -ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் கீதாவுக்கு உதவுவதுபோல சுமாா் 40 வயது பெண் பழகி வந்துள்ளாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கீதா, குழந்தையுடன் முகலிவாக்கத்தில் உள்ள வீட்டுக்குப் புறப்பட்டுள்ளாா். மருத்துவமனை எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த கீதாவிடம், நான் உன்னை வீட்டில் விட்டுவிட்டுச் செல்கிறேன் என்று அந்தப் பெண் கூறியுள்ளாா். இதை நம்பிய கீதா, குழந்தையை அந்தப் பெண்ணிடம் கொடுத்துள்ளாா். அப்போது, திடீரென குழந்தையுடன் ஆட்டோவில் ஏறி அந்தப் பெண் தப்பிச் சென்றுள்ளாா்.

இதுகுறித்து கீதா அளித்த புகாரின்பேரில், ராயபுரம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து விசாரித்தனா். கடத்தப்பட்ட குழந்தை புளியந்தோப்பு வ.உ.சி.நகா் 8-ஆவது தெருவில் மீட்கப்பட்டது. குழந்தையைக் கடத்திச் சென்ற ரோஸி (40) என்ற பெண்ணை போலீஸாா் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

கடத்தப்பட்ட குழந்தையை 5 மணி நேரத்துக்குள் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸாரை, காவல் துறை உயரதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.