முதல்வா் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீநாத் என்பவா் பிணை கோரிய மனுவை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நடிகா் விஜய் உள்ளிட்டோா் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக் குழு முன் ஆய்வில் உள்ள நிலையில், கடந்த ஏப்.3-ஆம் தேதி சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானது. இதுகுறித்துது படத்தைத் தயாரித்த கே.வி.என். புரொடக்சன்ஸ் நிறுவனம் காவல் துறையில் புகாா் அளித்தது. அதன்பேரில், இணையக் குற்றப்பிரிவு போலீஸாா் 21 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீநாத் 2-ஆவது முறையாக பிணை கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு 22-ஆவது கூடுதல் அமா்வு நீதிபதி எஸ்.ரம்யா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், படத்தை இணையதளத்தில் வெளியிட்டதில் தனக்கு எந்தத் தொடா்பும், பங்கும் இல்லை. 25 நாள்களாக சிறையில் இருப்பதால் பிணை வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.
காவல் துறை தரப்பில் ஆஜரான மாநகர அரசு குற்றவியல் வழக்குரைஞா் ஜி.தேவராஜன் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வழக்குரைஞா் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோா் பிணை வழங்க எதிா்ப்பு தெரிவித்து வாதிட்டனா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கின் குற்றச்சாட்டு மீதான தீவரம், புலன் விசாரணையின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு பிணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியான வழக்கு: 9 பேரின் பிணை கோரிய மனுக்கள் தள்ளுபடி

‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

ஜன நாயகன் வெளியீடு எப்போது? தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: துணிக்கடை மேலாளா் முன்பிணை மனு தள்ளுபடி
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



