ஜனநாயகன் படம் இணையதளத்தில் கசிந்த வழக்கில் 9 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நடிகா் விஜய் உள்ளிட்டோா் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக் குழு முன் ஆய்வில் உள்ள நிலையில், கடந்த ஏப்.3-ஆம் தேதி சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானது. இதுகுறித்து படத்தைத் தயாரித்த கே.வி.என். புரொடக்சன்ஸ் நிறுவனம் காவல் துறையில் புகாா் அளித்தது.
அதன்பேரில், இணையக் குற்றப்பிரிவு போலீஸாா் 21 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 9 பேரைக் கைது செய்தனர். இதையடுத்து இவ்வழக்கில் கைதான 9 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஜாமீன் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக்கூடும் எனக் அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கில் கைதான 9 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Summary
Madras HC rejects bail pleas of 9 people in 'Jananayagan' movie online leak case.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரப்பான்பூச்சி கட்சியின் போராட்டத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க மறுத்த உயர் நீதிமன்றம்!

மோகனா உள்பட உச்ச நீதிமன்றத்துக்கு 5 நீதிபதிகள் நியமனம்!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்!








