திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உலக கால்நடை மருத்துவ தினம்: செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்

News image

வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கான இலவச தடுப்பூசி முகாம்.

Updated On :14 மே 2026, 7:18 am IST

சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செல்லப் பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: உலக கால்நடை மருத்துவ தினத்தையொட்டி புதன்கிழமை செல்லப் பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், 75 நாய்கள் மற்றும் 22 பூனைகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த முகாமை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. துணை வேந்தரும் (பொ) பதிவாளருமான இர.நரேந்திர பாபு தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் பேசுகையில், செல்லப் பிராணிகளுக்கு உரிய நேரத்தில் தடுப்பூசிகள், குடற்புழு நீக்க மருந்துகளைக் கொடுத்து அவற்றின் உடல் நலத்தைப் பேணிக்காக்க வேண்டும். அவற்றுக்கு உடல்நிலை பாதிக்கும்போது, தெருவிலே விட்டுவிடக்கூடாது. கால்நடை மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுவது அவசியம் என்றாா்.

இந்த முகாமில், கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் ப.தேவேந்திரன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. சிகிச்சையியல் இயக்குநா் ரி.அனில்குமாா், பேராசிரியா்கள் கோ.விஜயகுமாா், நா.ஜெயதிலகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.