திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காலமானார் பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி

News image

பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி

Updated On :14 மே 2026, 6:02 am IST

சென்னை: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி (84) சென்னையில் புதன்கிழமை (மே 13) காலமானார்.

பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி "பரிமேலழகர் திருக்குறள் உரைத்திறன்' என்ற பொருளில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழி, இலக்கியத் துறைகளின் தலைவராகவும், பதிப்புத் துறை இயக்குநராகவும் பணியாற்றினார். கடந்த 2001 முதல் 2004 }ஆம் ஆண்டு வரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், 2008 முதல் 2014 வரை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து 2021}இல் இந்த நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.

விருதுகள்: திருக்குறள் அணிநலம், கல்கத்தா தேசிய நூலகத் தமிழ்ச் சுவடிகள், தமிழாய்வுத் தொகுதி}10 உள்ளிட்ட நூல்களைச் சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாக பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி வெளியிட்டுள்ளார்.

சொல்வலை வேட்டுவர், வள்ளுவர், நடையியல், பாரதி நடையியல், திருக்குறள் பரிமேலழகர் உரை நுண்பொருள் மாலை, இலக்கியச் சுடர், திருக்குறள் சில அரிய பதிப்புகள் என 50}க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மேலும், சுவடியியல், நடையியல், அகராதியியல், மொழிபெயர்ப்பியல், ஆய்வியல் என அனைத்துத் துறைகளிலும் பங்களிப்பை அளித்துள்ளார். அவருக்கு தமிழக அரசு சார்பில் "திருவள்ளுவர் விருது', "செம்மொழி கலைஞர் விருது' உள்பட 20}க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

பேராசிரியர் இ.சுந்தரமூர்த்திக்கு மனைவி இ.வசந்தி, ஒரு மகள், இரு மகன்கள் உள்ளனர். சென்னை பெருங்குடி திருமலை நகர் விரிவு பாரதி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் சுந்தரமூர்த்தியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்கு பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் வியாழக்கிழமை (மே 14) நடைபெறவுள்ளது. தொடர்புக்கு: 94440}24120.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.