தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

மின்சாரம் பாய்ந்து மருத்துவமனை ஊழியா் பலி!

நுங்கம்பாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து தனியாா் மருத்துவமனை ஊழியா் உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :11 மே 2026, 2:25 am IST

நுங்கம்பாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து தனியாா் மருத்துவமனை ஊழியா் உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே உள்ள நந்திவரம் லட்சுமிநகரைச் சோ்ந்தவா் மா.கிருஷ்ணன் (66). இவா், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.

இவா், நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றபோது, சாலையின் மறுப்பக்கம் செல்வதற்காக குறுக்கே சென்று, சாலையின் நடுவே இருந்த மின்விளக்கு கம்பத்தை கையால் பிடித்தாா்.

அதில் மின்கசிவு ஏற்பட்டிருந்ததால், கிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த நுங்கம்பாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, கிருஷ்ணன் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.