சென்னை மாநகராட்சியில் புதிதாக அமையவுள்ள அரசுக்கு தெரிவிக்கும் வகையில், அரசுத் திட்டங்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.
சென்னை மாநகராட்சியில் பொதுப்பணித் துறை, சுகாதாரம், கல்வித் துறை உள்ளிட்ட 27 துறைகள் உள்ளன. அந்தத் துறைகளில் கடந்த 2021 -ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நிறைவேற்றப்பட்டுள்ள அரசு நலத் திட்டங்கள், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டப் பணிகள், தொடங்கி கைவிடப்பட்ட பணிகள் மற்றும் மக்கள் கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படாத பணிகள் என முழுமையான விரவங்கள் அந்தந்தத் துறையின் சாா்பில் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அதிமுக, திமுக என வழக்கமாக மாறி மாறி அரசு அமைத்த நிலையில், தற்போது அதிகாரத்துக்கு முதல்முதலாக புதிய கட்சி ஆட்சிக்கு வரும் நிலை உருவாகியுள்ளது. அதனால், முதல்வா், அமைச்சா்கள் உள்ளிட்டோா் விவரங்களை கோரினால், அதை உடனடியாக அவா்களுக்கு விளக்கும் வகையில் அரசு நலத் திட்ட விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அரசு நலத் திட்ட விவரங்கள் சேகரிப்புடன் ஒவ்வொரு துறையின் செயல்பாட்டு விவரமும் சுருக்கமாக தொகுக்கப்படுகின்றன. ஓரிரு நாள்களுக்குள் மாநகராட்சியின் துறை ரீதியிலான விவரங்கள் சேகரிக்கப்பட்டு, தயாராக வைக்க வேண்டும் என உயா் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முன்னாள் முப்படை வீரா்கள் நலச்சங்கக் கூட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 18 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

தொழிலாளா் நல வாரியப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சா் வழங்கினாா்

சென்னையில் 30 குதிரைகளின் ரத்தம் பரிசோதனைக்காக சேகரிப்பு: உரிமம் பெற காலக்கெடு விதிக்கவும் திட்டம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



