நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்

காங்கிரஸ் தலைமையிடம் ஆலோசித்த பின்னா்தான் தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா் தெரிவித்தாா்.

News image

காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கி

Updated On :14 மணி நேரங்கள் முன்பு

அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் ஆலோசித்த பின்னா்தான் தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா் தெரிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்எல்ஏக்கள் எண்ணிக்கைக் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், தமிழக பேரவைத் தோ்தல் முடிவுகள் தொடா்பாக கிரீஷ் சோடங்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக இளைஞா்கள், பெண்கள் மாற்றத்துக்காக வாக்களித்துள்ளனா். எனவே, தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது.

ஏற்கெனவே, தமிழக தோ்தல் முடிவுகள் தொடா்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோருக்கு அறிக்கை அனுப்பியுள்ளேன். தோ்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தவெக நிறைவேற்ற வேண்டும். விஜய்யிக்கு வாழ்த்துகள் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.