நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

தவெகவுக்கு தேமுதிக ஆதரவா? பிரேமலதா பதில்!

தவெகவுக்கு தேமுதிக ஆதரவளிக்குமா என்ற கேள்விக்கு பிரேமலதா பதில்.

News image

பிரேமலதா விஜயகாந்த் . - கோப்புப்படம்

Updated On :7 மணி நேரங்கள் முன்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி ஆட்சியில் தேமுதிக பங்கேற்குமா என்ற கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதில் அளித்துள்ளார்.

தேமுதிக போட்டியிட்ட 10 தொகுதிகளில் விருத்தாசலத்தில் மட்டும் அந்தக் கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து, வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர்களிடம் இருந்து இன்று(மே 5) அவர் பெற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி ஆட்சியில் தேமுதிக பங்கேற்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்த பிரேமலதா, ”நாங்கள் மதச்சார்பற்ற கூட்டணி. அதில் உறுதியாக இருக்கிறோம்.

விஜய் எங்கள் வீட்டுப் பையன். அவருக்கு வாழ்த்துகள். புதிதாக ஆட்சியமைக்கவுள்ளவர்களுக்கும் வாழ்த்துகள். விஜய் எங்களுக்கு புதிதானவர் இல்லை. கேப்டனோடு பயணித்தவர்.

விஜய் வந்துள்ளார், அவர் நல்லபடியாக ஆட்சி செய்யட்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

நான் கூறிய அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினை நாளை சந்திக்கவுள்ளேன்” என்றார்.

Summary

Premalatha Vijayakant has responded to the question of whether the DMDK would participate in a coalition government led by the Tamilaga Vettri Kazhagam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.