மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

எதிர்க்கட்சி இல்லாத புதுவை!

புதுவை யூனியன் பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் குறித்து...

News image

புதுச்சேரி தலைமைச் செயலகம். - கோப்புப்படம்

Updated On :10 மணி நேரங்கள் முன்பு

புதுச்சேரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியே இல்லாத நிலை உருவாகியுள்ளது.

புதுச்சேரியில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது தேசிய ஜனநாயகக் கூட்டணி. இந்தக் கூட்டணி சார்பில் மீண்டும் முதல்வராகிறார் என்.ரங்கசாமி. மாநிலத்தில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 18 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.

புதுவையில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த என்.ஆா்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 10 தொகுதிகளிலும் அதிமுக 2, லட்சிய ஜனநாயகக் கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் திமுக 13 தொகுதிகளிலும், விசிக ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. போட்டியிட தொகுதி கிடைக்காத நிலையில் திமுகவை எதிர்த்து 5 தொகுதிகளிலும் விசிகவை எதிர்த்து ஒரு தொகுதியிலும் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவா்கள் 6 பேர் போட்டி வேட்பாளர்களாகக் களத்தில் நின்றனர். இதைத் தவிர இந்திய கம்யூனிஸ்ட் ஒரு தொகுதியிலும், மார்க்சிஸ்ட் இரண்டு தொகுதிகளிலும் தனியாகப் போட்டியிட்டன.

மேலும், இந்தத் தேர்தலில் புதிய வரவாக நடிகர் விஜய்யின் தவெக 28 தொகுதிகளில் தனித்தும் 2 தொகுதிகளில் புதுச்சேரியைச் சேர்ந்த நேயம் மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டது. இதைத் தவிர நாம் தமிழர் கட்சி மாஹே, ஏனாம் தொகுதிகளைத் தவிர்த்து 28 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது.

இதில் என்.ஆா். காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதிகளிலும், அதிமுக, லஜக தலா 1 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. புதுச்சேரியில் ஆட்சி அமைக்க 16 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் போதுமானது. இப்போதைய முடிவுகள் படி தேசிய ஜனநாயகக்கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. அந்த கூட்டணிக்கு 18 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

புதுச்சேரியில் மீண்டும் முதல்வர் என்.ரங்கசாமி தலைமையில் அமையப் போகும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அதிமுக இடம் கேட்கும் என்று அந்தக் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலரும் உப்பளம் தொகுதியில் வெற்றி பெற்றவருமான ஆ.அன்பழகன் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் திமுக 5 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. தவெக 2 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 3 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு 12 புதுமுகங்கள் தோ்வாகியுள்ளனர்.

எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லாத புதுவை!

புதுச்சேரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி அந்தஸ்து வகிக்க 6 தொகுதிகளில் ஒரு கட்சி வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

அதாவது சட்டப்பேரவையின் மொத்த எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கு எண்ணிக்கை இருந்தால்தான் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அப்படி பார்த்தால், காங்கிரஸ் உள்ளிட்ட எந்த எதிர்க்கட்சியும் 6 தொகுதிகளில் தனித்து வெற்றிபெறவில்லை. தேர்தல் முடிவுகளின் படி யாருக்கும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்க வாய்ப்பில்லை.

ஆனால், அவை முன்னவரான முதல்வர் விருப்பப்பட்டால் எதிர்க்கட்சி அந்தஸ்து கொடுக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

Summary

A situation has arisen in the Puducherry Legislative Assembly where there is no opposition party.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.